மதுரை – டிச – 12,2021
மதுரை மாவட்டம் ஒத்தகடை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணண் எதற்காவும் மக்களிடம் நான் லஞ்சம் வாங்கமாட்டேன் எந்த வழக்கு என்னிடம் வந்தாலும் அதன் உண்மைதன்மையை அறிந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் .உண்மையை மறைக்கவோ அல்லது அநீதி இழைக்கபட்டவருக்கு எதிராக வழக்கை திசைதிருப்ப லஞ்சம் பெறுவதோ லஞ்சம் வாங்குவதோ கிடையாது என உறுதியாக கூறுகிறேன் என தன்னுடைய காவல்நிலையத்தில் வரவேற்பு அறையில் தகவல் பலகையாக அந்த உறுதிமொழியை மாட்டியுள்ளார்.
இவரை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்ஆய்வாளர்( இன்ஸ்பெக்டர் )
சரவணண்
(இவர் பெயரும் சரவணணே )அவரும் அறிவித்துள்ளார் நல்லபண்புகளை நாம் முதலில் கடைபிடிப்பதும் அதை பார்த்து மற்றவர்களும் கடைபிடிப்பது என்பது உயர்ந்த செயல்களின் சிறப்பானது. இதுபோன்ற காவல்துறை அதிகாரிகள் தமிழகெங்கும் உறுதிமொழி கொண்டால் பாமர மக்களின் வாழ்வு செழிக்கும் என்பதில் மாற்றமில்லை. இவரை வருகிற செவ்வாய்கிழமை சந்திக்க உள்ளேன் என்பதையும் குறிப்பிடுகிறேன். லஞ்சத்தை ஒழிக்க காவல்துறை அதிகாரிகளின் மாற்றம் மட்டும் போதாது மக்களும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் ஒரு வழக்கை விசாரித்து பிரச்சினையை தீர்த்துவிட்டால் உடனே பணத்தை எடுத்து நீட்டுவது தவறான செயலாக மாறிவிடும். நாமே அவர்களை தூண்டிவிடும் சூழலை உருவாக்கி விடுகிறோம். காவல்துறை அதிகாரிகள் கடமைதானே செய்தார்கள் நாம் ஏன் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்கிற ஒற்றை கேள்வியை செயலாக்குங்கள் அப்போதுதான் யா.ஒத்தகடை காவல் ஆய்வாளர் சரவணண் போன்ற நேர்மையான அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்