தூத்துக்குடி – டிச -20,2021
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் முத்துக்குமார் என்பவர் குமார் கூல்டிரிங்ஸ் என்றபெயரில் பழக்கடை நடத்தி வருகிறார் இவர் தொடர்ந்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் வந்தது அவருடைய உத்தரவின்பேரில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்வன் ஆகியோர் கொண்ட காவல்குழுவினர் அவருடைய கடை மற்றும் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர் அவருடைய வீட்டில் பதுக்கிவைத்திருந்த தடைசெய்யபட்ட கனேஷ் ,ஹானஸ் , கூலிப் போன்ற குட்கா பொருட்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர் இவர் இது போன்று தடைசெய்யபட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து பல முறை போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது