73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி கஞ்சா விற்பனையில்‌‌‌ ஈடுபட்‌‌‌ட 13,பேர்‌‌‌ மீது குண்டாஸ் கமிஷனர் அதிரடி

கஞ்சா விற்பனையில்‌‌‌ ஈடுபட்‌‌‌ட 13,பேர்‌‌‌ மீது குண்டாஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி – டிச – 16,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் பள்ளிகள் மற்றும் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தும், கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும். மாநகரில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். கடந்த 2020-ம் வருடம் திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 137 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வருடம் திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது இதுநாள் வரை 186 வழக்குகளில் 260 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 13 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 5500 மாணவர்களுக்கு காவல் ஆளிநர்கள் மூலம் போதை பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தகவலாலிகள், காவல் ஆளிநர்கள் சேர்ந்த வாட்ஸ் ஆப் குழு அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்