தஞ்சாவூர் – டிச -16,2021
செய்தியாளர் – சோமாஸ்கந்தன்
நவம்பர் 3ம்தேதி தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுத் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில SI மகேந்திரன் , SSINகந்தசாமி , HC1888 இளையராஜா , Gri1281 1025R.விஜய், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புமிக்க கஞ்சாவினை கடத்தி வந்து அதை இலங்கைக்கு படகு மூலம் விற்பனை செய்ய இருந்தவரை தஞ்சாவூர் சரக தனிப்படையினர் ரகசிய தகவல் மூலம் நாகப்பட்டினத்தை சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை பிடித்து விசாரணை செய்து 200 கிலோ கஞ்சா , ஆம்புலன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர் இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும், கஞ்சா மற்றும் ஆம்புலன்சை பறிமுதல் செய்த DGP/TN தனிபடையினருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்