73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் சென்னை கானா பாடல் மூலம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை கமிஷனர் தலைமையில்...

கானா பாடல் மூலம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை கமிஷனர் தலைமையில் நடைபெற்றது

சென்னை – டிச – 28,2021

செய்தியாளர் – கே.நியாஸ்

மாதவரம் காவல் துணை ஆணையாளர் தலைமையில், கானா பாலா மற்றும் கானா பாடகர்களுடன் கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா, உள்ளிட்ட போதை பொருட்களின் பெயர்களை சேர்க்காமல் பாடல் பாடுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், கஞ்சா, குட்கா, மாவா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம், இ.கா.ப., தலைமையில், மாதவரம் சரக உதவி ஆணையாளர் அருள் சந்தோஷமுத்து மற்றும் காவல் ஆளிநர்களுடன் காவல்துறை சார்பில், 27.12.2021 அன்று கானா பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம் பெற்றுள்ள சில கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயம் இப்பாடல்களை கேட்டு தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும் என்பதால், கானா பாடகர்கள் இனி வரும் காலங்களில் போதை பொருட்களை கொண்டு பாடல் பாடாமல் நல்ல கருத்துக்களை இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கானா புகழ் பாடகர் திரு.கானா பாலா அவர்களும் இளைஞர் சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பாடல்களை பாடும்படியும், போதை பொருட்களின் பெயர்களை பயன்படுத்தாமல் பாடல்களை பாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்பரில், கானா பாடகர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்து பாடி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 3 பாடல்களை உடனே நீக்கம் செய்தனர். மேலும், இனி வரும் காலங்களில் போதை குறித்த பாடல்களை பாடுவதில்லை என கானா பாடகர்கள் உறுதி கூறினர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்