86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி விழிப்புணர்‌‌‌வு

பள்ளி மாணவிகளுக்கு சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி விழிப்புணர்‌‌‌வு

தூத்துக்குடி – டிச – 09,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.இ. ரோடு பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மாணவியருக்கு மிக அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. கல்வி ஒன்றுதான் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்களது புகைப்படங்களையோ, சுய விவரங்களையோ சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஹோலிகிராஸ் பள்ளி தலைமையாசிரியர் ஞானம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், உதயலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் விளையாட்டு வீரர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நியூஸ் - webteam நெல்லை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்