76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி ஆயுதபடை மைதானத்தில் மாவட்ட எஸ்பி முன்னிலையில் டிஐஜி வருடாந்‌‌‌திர‌ ஆய்வு

தூத்துக்குடி ஆயுதபடை மைதானத்தில் மாவட்ட எஸ்பி முன்னிலையில் டிஐஜி வருடாந்‌‌‌திர‌ ஆய்வு

தூத்துக்குடி – டிச -11,2021

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு இ.கா.ப, இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் 2021ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உடனிருந்தார்.

அப்போது மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உட்பட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளாதேவி, பவித்ரா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்