76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற முயன்ற வீரருக்கு டிஜிபி தங்க பதக்க விருதுக்‌‌‌கு பரிந்துரை

ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற முயன்ற வீரருக்கு டிஜிபி தங்க பதக்க விருதுக்‌‌‌கு பரிந்துரை

திருச்சி – டிச – 16,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி, திருச்சி மாநகரம் ,சிறப்பு காவல் படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 16.12.2021 ஆம் தேதி காலை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் தலைமையில் காவல்துறை குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ,திருச்சி மாநகர காவல் ஆணையர், காவல்துறை துணை தலைவர்கள் திருச்சி மற்றும் தஞ்சாவூர், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை தளவாய் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த குறைதீர்ப்பு முகாமில் மொத்தம் 1069 மனுக்கள் காவலர்களிடம் நேரடியாக காவல் துறை இயக்குனர் அவர்களால் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் வெகுமதி அளித்த நிகழ்ச்சியில் மத்திய மண்டலம், திருச்சி மற்றும் திருச்சி மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி திறம்பட செயல்பட்டு பல முக்கிய வழக்குகளை கண்டு பிடித்தமைக்காக மத்திய மண்டலத்தில் 23, திருச்சி மாநகரத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் வெகுமதியளித்து பாராட்டினார்.
மேலும் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தன் உயிரை துச்சமாக நினைத்து பிற உயிரை காப்பாற்றி வீரதீர செயல் புரிந்தமைக்காக 12 பொதுமக்களை கெளரவிக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு. IPS., பாராட்டி வெகுமதி அளித்தார்.
அதில் குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15 வயது பெண் குழந்தையை காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து அருண் பிரசாத் (வயது 23) மற்றும் முகிலன் (வயது 45) இருவரும் ஆற்றில் குதித்தனர். இருவரில் முகிலன் அந்த பெண் குழந்தையுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் நீத்தார். அருண்பிரசாத் மட்டும் உயிருடன் கரையேறினார். இவர்களின் வீரதீரச் செயலை பாராட்டி அருண் பிரசாத் அவர்களுக்கும் முகிலனின் குடும்பத்தாருக்கும் வெகுமதி அளித்ததுடன் தமிழக அரசின் வீர தீரச் செயல் புரிந்தமைக்கான பதக்கத்திற்கு சிபாரிசு செய்வதாகவும் காவல்துறை இயக்குனர் தெரிவித்தார்‌‌‌

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்