100 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பிரமாண்ட அருங்காட்சியமாக மாற்றி அமைக்க உதவிய போலீசாருக்கு...

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பிரமாண்ட அருங்காட்சியமாக மாற்றி அமைக்க உதவிய போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை – டிச – 13,2021

சுமார் 165 ஆண்டுகளாக காவல் ஆணையாளர் அலுவலகமாக இயங்கி வந்த இந்த பழைமை வாய்ந்த காவல் ஆணையாளர் அலுவலகத்தை, அனைவரும் வியக்கத்தக்க வகையில் பிரமாண்டமாக காவல் அருங்காட்சியகமாக மாற்ற அப்போதைய காவல்துறை இயக்குநர் திரிபாதி ஒப்புதல் தெரிவிக்க, தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மற்றும் அமல்ராஜ், இ.கா.ப., அவர்களின் சீரிய முயற்சியாலும் குறுகிய காலத்தில் இந்த கட்டிடம் அருங்காட்சியமாக உருப்பெற்றது.

இந்த அருங்காட்சியகம் சிறப்பாக உருவாக பல்வேறுபட்ட துறையை சேர்ந்தவர்களும், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர். ஸ்டீவ் போர்ஜியா மற்றும் 10 Architect மாணவர்களின் கடின உழைப்பாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த அருங்காட்சியகத்திற்கான காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டன. எனவே இந்த பெருமைவாய்ந்த காவல் அருங்காட்சியகம் உருவாக உறுதுணையாக இருந்து பல்வேறு காட்சி பொருட்களை வழங்கி உதவி புரிந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், புகைப்பட கலைஞர்கள் தடய அறிவியல் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், காவல்துறை வாத்தியக் குழுவினர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கீழே பணி புரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் என இதில் பங்கேற்ற சுமார் 240 பேருக்கு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, இ.கா.ப பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பாராட்டு விழாவின் போது கூடுதல் காவல் ஆணையாளர் அமல்ராஜ், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் சாமுண்டேஸ்வரி, இ.கா.ப., துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், ஸ்டீவ் போர்ஜியா ஆகியோர்‌‌‌ உடனிருந்தனர்.

19,724FansLike
88FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்