திருப்பத்தூர் – டிச -06,2021
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் இன்று திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா, தலைமையில் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது. வங்கியிலிருந்து பேசுகிறோம், ஏடிஎம் கார்டு expiry ஆக போகிறது, KYC update செய்ய வேண்டும் என்று வரும் Call சம்பந்தமான குற்றங்கள் உங்கள் நண்பர்களை போன்று Fack ID ஐ பேஸ்புக்கில் Create செய்து அவசர தேவை என்று பணம் பறிக்கும் குற்றங்கள், மோசடி, குலுக்கல் பரிசு விழுந்துள்ளது, என்று மெசேஜ், லிங்க் அனுப்பி நடைபெறும் குற்றங்கள், Job offers என போலியாக வரும் மெசேஜ், லிங்க் மூலம் நடைபெறும் குற்றங்கள். போன்ற பல இணையவழி குற்றச்சம்பவங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது சம்மந்தமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. உடன் உதவி ஆய்வாளர் சரத்குமார், காவலர்கள் கங்கா தேவி, கனிமொழி, தேன்மொழி மற்றும் ரவீன்குமார் ஜெயகுமார் மஞ்சுளா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 800 மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்