புதுக்கோட்டை – டிச – 07,2021
புதுக்கோட்டை உட்கோட்டத்தில் நகர ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், இ.கா.ப., காவல்துறை தலைவர், தலைமையில் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், போக்சோசட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் சைபர் குற்றங்கள் இலவச உதவி எண்கள் 155260, 181, 1098 & 112 குறித்து விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியாரின் பாடலை பாடி விழப்புணர்வு வழங்கினார். மேற்படி நிகழ்ச்சியில் கூடுதல் சாவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலி சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் தமிழரசி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வில்லிகிரேஸ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஷியா கரேஷ்ட மாவட்ட குழந்தை நல அலுவலர், மாவட்ட சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் ராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.