சேலம் – டிச -17,2021
செய்தியாளர் – முரளி
சேலம் மாவட்டம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேலம் மாவட்ட காவல் துறை மற்றும் பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஒன்றியம் பள்ளிக்கல்வித்தறை இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ.அபிநவ் இ.கா.ப , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் பெண் குழந்தை திருமணம்,பாலியல் துன்புறுத்தல், தமிழக அரசு ஹெல்ப்லைன் 24 மணி நேர சேவை எண்கள் 181,1098,1091, காவலர் செயலி உபயோகிப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்தும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சுற்று வட்டாரத்தில் போதை தரும் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் அல்லது இலவச எண்னை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும் போதை பொருட்களை உபயோகிக்க கூடாது மற்றும் மனம் மயக்கும் மற்றும் போதை தரக்கூடிய வாசனை திரவியத்தை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் . என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரகரம் வெளியிடப்பட்டது