80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "விதிமீறல்" இல்லாத சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

“விதிமீறல்” இல்லாத சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

கோயம்புத்தூர் – டிச -03,2021

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., “EEE”(Enforcement, Education,Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதின் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையர் , முக்கிய சந்திப்பு பகுதிகளை தேர்ந்தெடுத்து “போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு” (Zero violation Junction)என அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் செந்தில்குமார், தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், சிந்தாமணி சந்திப்பு பகுதியை போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு” (Zero violation Junction) என தேர்ந்தெடுக்கப்பட்டு விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., கலந்துகொண்டு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிந்தாமணி சந்திப்புப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டு தலைக்கவசம் அணியாதவர்கள், சிக்னல்களில் எல்லைக் கோட்டை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் என பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு, வாகன விபத்து எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றியும் அவ்வாறு வாகன விபத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி NSS மாணவர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ஏற்படுத்தப்பட்டு,வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்