76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "நெல்லை" எஸ்பி காவல் கட்டுபாட்டு அறையில் திடீர் ஆய்வு

“நெல்லை” எஸ்பி காவல் கட்டுபாட்டு அறையில் திடீர் ஆய்வு

திருநெல்வேலி – டிச -22,2021

திருநெல்வேலி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் தலைமை காவலரை பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல்துறையில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை அனைத்து காவலர்களுக்கும் மிக எளிமையான முறையில் தகவலை கொண்டு சேர்ப்பதற்கும், மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் எதிரிகளை உடனடியாக பிடிப்பதற்கு காவல் துறையினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு முக்கிய பிரிவாக காவல் துறையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்கினார். மேலும் காவல் கட்டுப்பாட்டு அறையில் 10 ஆண்டு காலம் சிறப்பாக பணிபுரிந்து வரும் தலைமை காவலர் கணேஷ் சரவணன் பாபு, தகவல் தொடர்புகளை கவனித்த காவல் கண்காணிப்பாளர் இனிமையான குரல் வளத்தால், தகவல் தொடர்புகளை மிக எளிமையாகவும், முழு ஈடுபாட்டுடனும் தகவல்களை காவலர்களுக்கு அவ்வபோது கொண்டு சேர்க்கிறார் என பாராட்டினார். மேலும் தலைமை காவலரின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்., இ.கா.ப., பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்