73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் 677,புகார்மனுக்களுக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் 677,புகார்மனுக்களுக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி – டிச -11,2021

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இன்று மனு விசாரணை சிறப்பு முகாம் (Petition Mela) நடைபெற்றது – இன்று ஒரே நாளில் 677 மனுக்களுக்கு உடனடி தீர்வு – கோவில்பட்டி சாரதா திருமண மஹாலில் நடைபெற்ற சிறப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், அந்தந்த உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் 16 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து சட்டப்படி உரிய தீர்வு காண காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மனு விசாரணை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹால் மற்றும் தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியில் உள்ள பாஸ்கர் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டதிற்கு புதுக்கோட்டை பகுதியிலுள்ள சத்யா திருமண மஹாலிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு திருச்செந்தூர் குறிஞ்சி திருமண மஹாலிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா திருமண மண்டபத்திலும் மற்றும் ஏரல் பகுதியிலுள்ள ராஜம்மாள் திருமண மஹால் ஆகிய 2 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு கோவில்பட்டி மார்க்கெட் பகுதியிலுள்ள சாரதா திருமண மஹாலிலும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள டிஎம்பி மெக்காவே பள்ளியிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு புதூரில் உள்ள சுப்பாராவ் திருமண மண்டபம், விளாத்திகுளம் ஆர்த்தி திருமண மஹலாலிலும், எட்டையாபுரம் ஆவுடையம்மாள் திருமண மஹாலிலும் மற்றும் குளத்தூர் காவல் நிலையத்திலும் ஆகிய 4 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும், மெஞ்ஞானபுரம் ஜெய் திருமண மஹாலிலும், நாசரேத் ட்விங்கிள் திருமண மஹாலிலும் மற்றும் தட்டார்மடம் சங்கர பகவதி கல்லூரியிலும் ஆகிய 4 இடங்களிலும் என தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் இந்த பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவில்பட்டி மார்க்கெட் பகுதியிலுள்ள சாரதா திருமண மஹாலில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாமில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற பொதுமக்களின் புகார் மனு மீதான சிறப்பு விசாரணை முகாமில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 153 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 138 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, அதே போன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 69க்கு 55ம், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 82க்கு 82ம், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 114க்கு 72ம், மணியாச்சி உட்கோட்டத்தில் 65க்கு 65ம், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 70க்கு 58ம், விளாத்திக்குளத்தில் 140க்கு 126ம், சாத்தான்குளத்தில் 81க்கு 81ம் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 774 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 677 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்