76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெருநகர போலீஸ் கமிஷனர் 47,மனுக்கள் மீது நடவடிக்‌‌‌கை

உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெருநகர போலீஸ் கமிஷனர் 47,மனுக்கள் மீது நடவடிக்‌‌‌கை

சென்னை – டிச -29,2021

செய்தியாளர் – கே.நியாஸ்

“உங்கள் துறையில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று 3வது நாளாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து 47 மனுக்களை பெற்றார்.

கடந்த 24.12.2021, 27.12.2021 மற்றும் இன்று (28.12.2021) ஆகிய 3 தினங்களில் மொத்தம் 939 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப தலைமையில், இன்று மதியம் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்களில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இம்முகாமின் 3வது மற்றும் இறுதி நாளில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப , சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடம் நேரடியாக காவலர்களின் குறைகளை கேட்டறிந்து பணி இடமாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 47 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கடந்த 24.12.2021 அன்று 431 மனுக்களும், 27.12.2021 அன்று 461 மனுக்களும், இன்று 47 மனுக்களும் என 3 நாட்களில் மொத்தம் 939 மனுக்களை, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இருந்து நேரடியாக பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இம்முகாமில், கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், (தலைமையிடம்), சௌந்தராஜன் (ஆயுதப்படை), ரவிச்சந்திரன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்