93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி திருச்சியில் 375,ரவுடிகள் கைது கமிஷனர் அதிரடி

திருச்சியில் 375,ரவுடிகள் கைது கமிஷனர் அதிரடி

திருச்சி – டிச -02,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

காவல் ஆணையர் கார்த்திகேயர், இ.காப, , திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம், அதனை தடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையரின்‌‌‌ மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரகள், சட்டவிரோத கஞ்சா விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட வாட்டரி விற்பனை மற்றும் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம். கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும். போக்குவரத்தை சரிசெய்யயும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள்’ மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் பாதங்களில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சிர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டுவந்த 375 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக செயல்துறை நடுவரிடம்‌‌‌ 158 ரவுடிகளை ஆஜர் செய்து குற்ற செயலில் ஈடுபடாதவண்ணம் பிணை பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிணை பத்திரத்தை மீதி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 ரவுடிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 18 ரவுடிகள், திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்ட 8 எதிரிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு எதிரி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த ஒரு எதிரி என 28 நபர்கள் மீது குண்‌‌‌டர்‌‌‌ தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 15 எதிரிகளை கைதுசெய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த எதிரி ராஜ்குமார் (எ) வீரப்பன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 எதிரிகளை கைதுசெய்து, ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 67 எதிரிகளை கைதுசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள், சட்டவிரோத தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுபார்களை தொடர்ந்து கணிகாணித்து அவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை செய்கிறார்

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்