திருப்பத்தூர் – டிச – 20,2021
திருப்பத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபாராஜு தலைமையில் ஆய்வாளர் பிரேமா உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் குழுவுடன் இயங்கிவருகிறது.
கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதிந்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதன் பெயரில் சைபர் கிரைம் காவல் நிலையம் குழு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வெளி மாநிலங்கள் மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும். வெளி மாவட்டங்கள் கோவை, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு வேலூர், கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 17 லட்சம் மதிக்கத்தக்க 100 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மீட்கப்பட்ட 100 செல்போன்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கினார்.
மேலும் சிறப்பான செயல் செய்தமைக்காக சைபர்கிரைம் குழுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்