93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்‌‌‌மண்டல ஐஜி விசிட்

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்‌‌‌மண்டல ஐஜி விசிட்

தூத்துக்குடி – நவ-07,2021

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌ எஸ். ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு – மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் டி.எஸ். அன்பு இ.கா.ப நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகின்றது. வருகின்ற 09.11.2021 அன்று சூரசம்ஹாரம், 10.11.2021 அன்று திருக்கல்யாணம் ஆகிய இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதையடுத்து, மேற்படி 2 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு வரும் 11.11.2021 முதல் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை தென்மண்டல் காவல்துறை தலைவர் டி.எஸ். அன்பு இ.கா.ப அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர்‌ ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் முரளீதரன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கனகாபாய், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேல்முருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்