தூத்துக்குடி – நவ -16,2021
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பி ஜெயக்குமாருக்கு பரமன்குறிச்சி கிராம மக்கள் பாராட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் நேற்று 15.11.21 இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இயற்கையாக நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்த அவரின் உடலை உறவினர் இடம் கொடுக்காமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுமென்றே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்..அதன் உண்மைநிலையை முறையாக விசாரிக்காமல் போஸ்ட்மார்டம் பண்ணிய பின்புதான் உடல் வழங்கப்படும் என்று உறவினர்களை அச்சுறுத்திய பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர்..பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் ஊர் பிரமுகர் மதன்ராஜ், கலாம் சட்டஅலுவலக வழக்கறிஞர் பிரகாஷ், ஆகியோர்கள் மதிப்பிற்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அதிகாலை 2மணி அளவில் தொலைபேசி வாயிலாக உண்மைநிலையை எடுத்துக்கூறிய போது உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு உடலை பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார்..அதன்படி அதிகாலை 3 மணிக்கு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..பாதிக்கப்பட்ட உறவினர்களும்,முந்திரிதோட்டம் ஊர் மக்களும் அவர்களுடன் தமிழக மாணவர் இயக்கத்தினர்களும் இரவு நேரத்திலும் பாதிக்கப்பட்டவரின் நிலைமையை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை பாராட்டினார்கள்..