தென்காசி – நவ – 20,2021
தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் காவல் நிலையத்தின் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உ பெயரில் தென்காசி ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த 20 இரண்டாம் நிலை காவலர்களை காவலர் பயிற்சியின்போது எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களின் விருப்ப ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் கேட்கப்படும் காவல் நிலையம் வழங்கப்பட்டது.
பின்பு இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 20 காவலர்களிடம் கூறுகையில் ஆயுதப் படையில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்காக செல்ல இருக்கும் நீங்கள் முன்பு இருந்ததை விட கூடுதல் பொறுப்புடன், பொதுமக்களிடம் கனிவாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரைகள் வழங்கி பொது மக்களுக்கு காவல்துறை என்றும் நண்பன் என்பதை உணர்த்தும் வகையில் பணிபுரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.