தூத்துக்குடி – நவ ,19,2021
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் கலாம் இளைஞர்கள் சேவை மையம் சார்பாக 500 மரக்கன்றுகள் நடும் விழாவில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் மறைந்த டாக்டர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கலாம் இளைஞர்கள் சேவை மையம் சார்பாக 500 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
அப்போது அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், மரம் வளர்ப்பதினால் நமக்கு பல பயன்கள் உள்ளது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் தேவை. மேலும் நாம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம். இயற்கை, நமக்கு மரங்களை படைத்து அதன் மூலம் சுத்தமான ஆக்ஸிஜனை நமக்கு கொடுத்து, கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் இருந்தால்தான் உலகம் இயங்கும். தற்போது மரங்கள் குறைந்து வருகிறது. இதனை நிறைவு செய்ய நாம் அனைவரும் கண்டிப்பாக ஆங்காங்கே மரம் நட்டு வளர்க்க வேண்டும். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் கண்டிப்பாக உங்கள் பகுதிகளில் மரம் நட வேண்டும் என கேட்டுகொண்டு, மரம் நடுவதால் நமக்கு மட்டுமல்ல நமது வருங்கால சந்ததியினருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கண்டிப்பாக மரம் நடவேண்டும் என்று கேட்டுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலாம் இளைஞர் சேவை மையத்தின் நிறுவனர் லெட்சுமணகுமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பனர் சண்முகையா, ராஜலெட்சுமி, அலெக்ஸாண்டர், ரூஸ்வெல்ட், இசக்கிமுத்து, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.