84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் சென்னை காவலர் குடியிருப்பில்‌‌‌ உள்ள வெள்ள சேதங்களை போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்

காவலர் குடியிருப்பில்‌‌‌ உள்ள வெள்ள சேதங்களை போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்

சென்னை – நவ -10,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிடவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்திவும் உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் அதிகாரிகளுடன் இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம் காவல் நிலையம் பின்புறமுள்ள, கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று, அங்குள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும், அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டதின்பேரில், மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், காவலர்களின் குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் மற்றும் Emergency Light உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம், காவலர்களின் குடும்பத்தினர் தெரிவித்த குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உறுதியளித்தும், துரித நடவடிக்கை மேற்கொள்ளஉத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் கண்ணன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் ராஜேந்திரன், இ.கா.ப., கீழ்பாக்கம் துணை ஆணையாளர் கார்த்திக்கேயன், இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்