100 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் போக்குவரத்து பிரிவு மற்‌‌‌றும்‌‌‌ புலனாய்வுப்பிரிவு போலீசாருடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

போக்குவரத்து பிரிவு மற்‌‌‌றும்‌‌‌ புலனாய்வுப்பிரிவு போலீசாருடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

கோயம்புத்தூர் – நவ -27,2021

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் உதவி ஆணையர்கள் போக்குவரத்து, காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சாலை விபத்து அதிகம் நடைப்பெறும் பகுதிகளைக் கண்டறிந்து, விபத்தை தவிர்ப்பதற்கான தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செயல் படுத்தவும்,சாலை விபத்தை குறைக்கும் விதமாக, போக்குவரத்து விதிமீறல் செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் வேகக்கட்டுப்பாட்டு கான எச்சரிக்கை பலகை வைக்கவும், முக்கிய சிக்னல்களில் வேகக்கட்டுப்பாட்டு கான டிஜிட்டல் பலகை வைக்கவும் அறிவுறுத்தினார்.
அனைத்து போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும், ஆட்டோ டாக்ஸி, மேக்ஸி கேப், லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இடையே சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்கள் விபத்து வழக்குகளில் துரித நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து மேலும் அப்பகுதியில் விபத்து நடக்கா வண்ணம் கட்டமைப்பு வசதிகள், எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

19,724FansLike
88FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்