சென்னை – நவ-04,2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தீபாவளி பண்டிகையையொட்டி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, , 03.11.2021 அன்று மாலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்) இணை ஆணையாளர் சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் பாலாஜிசரவணன், (தலைமையிடம்), சௌந்தர்ராஜன் (ஆயுதப்படை), காவல்அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.