திண்டுக்கல் – நவ -18,2021
பொது மக்களுக்கு கொரோனா 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்த உதவிய பெண் காவலருக்கு தங்ககாசு பரிசளித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் ரத்தினகுமாரி என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தாமல் இருந்த பொதுமக்களை போனில் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி அதிகமான நபர்கள் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு உதவியாக இருந்துள்ளார். இவரின் நற்செயலை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒரு தங்கக்காசு பரிசளித்து பாராட்டினார்