தேனி – நவ -19,2021
செய்தியாளர் – செல்வகுமார்
தேனி மாவட்டம் வீரபாண்டி காவலர் சமுதாயக் கூடத்தில் குழந்தைகளுக்கான உரிமை, பாதுகாப்பு, நட்பு, அணுகுமுறை மற்றும் காவல்துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஸ்டெல்லா (Director, AHM Trust.), முன்னிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., மற்றும் ராஜ்மோகன், (secretary / Judge, DLSA,Theni) ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேலும் கூடுதல் கவல் கண்காணிப்பாளர்கள் .சக்திவேல் (ADSP-HQ),.சங்கரன் (ADSP-CWC), பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் (DSP) மற்றும் காவல்துறை அதிகாரிகள் AHM Trust & Child line அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.