96.7 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி வீரமரணமடைந்த சிறப்பு எஸ்ஐயின்‌‌‌ வீட்டிற்க்கு தமிழக டிஜிபி நேரில் சென்று அஞ்‌‌‌சலி

வீரமரணமடைந்த சிறப்பு எஸ்ஐயின்‌‌‌ வீட்டிற்க்கு தமிழக டிஜிபி நேரில் சென்று அஞ்‌‌‌சலி

திருச்சி – நவ -23,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திருபூமிநாதன் இரவு ரோந்து பணியின் போது கடந்த 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆடு திருடி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்காக நவல்பட்டு பூலாங்குடி காலனியில் இருந்து அவர்களை பின்தொடர்ந்து தனது இரு சக்கர வாகனத்தில் 15 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று குற்றவாளிகளை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகில் பிடித்த போது குற்றவாளிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பணியின் போது வீரமரணம் அடைந்தார்,

2) மேற்படி சம்பவம் நிகழ்ந்த அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் இரண்டு நாள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை தலையை இயக்குநர்களுக்கான மாநாட்டில் சுலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய உடன், சென்னையில் இருந்து நேரடியாக திருச்சிக்கு வந்து, இன்று காலை, திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழமாதேவி நகரில் உள்ள வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வீட்டிற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதலை தெரிவித்தார்.

3) வீர மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவருடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தமைக்கும் மேலும் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கவும் உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு காவல்துறை இயக்குனர் அவர்கள் காவல்துறை குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்தார்.

4) மேலும் கொலை வழக்கில் துரிதமாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் விரைந்து கைது செய்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை காவல்துறை தனிப்படையினரை நவல்பட்டு காவல் நிலையத்தில் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அவரது வருகையின் போது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர், திரு. கார்த்திகேயன் ஐ.பி.எஸ், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆ. சரவன சுந்தர், ஐ.பி.எஸ் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஐ.பி.எஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்