76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மெச்சதகுந்த பணிக்காக 19,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

மெச்சதகுந்த பணிக்காக 19,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – நவ-01,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தங்க நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவரை மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து கிடைக்கப்பெற்ற வான்செய்தி தகவலின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் எதிரிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றிய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர்கள் கண்ணன், வெள்ளத்துரை, முதல் நிலை காவலர்பரமசிவன், காவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 எதிரிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தும்,

நன்னடத்தை பிணை பத்திரம் பெற்ற எதிரி பிணை பத்திரத்தை மீறி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் கொலை முயற்சியில் ஈடுபட்ட மேற்படி எதிரிக்கு 6 மாத சிறை தண்டணை பெற்றுக்கொடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி மற்றும் முதல் நிலை காவலர் மாணிக்கராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது சென்னையில் வைத்து காணாமால் போனதால் வந்த புகாரின் அடிப்படையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்த புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம், சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் தலைமை காவலர் கவுஸ் முகைதீன்கான் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட காரை கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு சுங்கசாவடி பகுதியில் வாகன தணிக்கையின் போது கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் காவல்கள் கணேஷ்குமார் மற்றும் திருப்பதிகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டுவழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேரை கைவிரல் ரேகை மூலம் அடையாளம் கண்டு வழக்கின் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி ஒருவிரல் ரேகை பதிவுகூட உதவி ஆய்வாளர் முருகேஷ்வரி மற்றும் தலைமை காவலர் திருமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு எதிரி மற்றும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கு எதிரி ஆகிய 2 எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் மோகன்ராஜ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட முயற்சி செய்து தப்பி சென்றவரை இருசக்கர வாகன ரோந்து பணயிலிருந்து துரத்தி சென்று மடக்கி பிடித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவலர் சந்திரசேகரன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் . கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்