அரியலூர் – நவ -28,2021
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்தி வாழ்வதற்காக மன மற்றும் மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலை கதிரவன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு. இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் தலைமையில் 28.11.2021 இன்று ஜெயங்கொண்டம் ரங்கா மஹாலில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.திருமேனி அவர்கள் முன்னிலையில் வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் போதை பொருட்களை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், அந்த பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதை பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ நினைப்பவருக்கு அரசு உதவும் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் சுகாதார துறை துணை இயக்குநர்் Dr. கீதாராணி, அரியலூர் (GH, Psychiatrists) Dr. அன்பழகி ஜெயங்கொண்டம் ரோட்டரி கிளப் திரு. செல்வராஜ், தா பழூர் ஆசிரியர் திரு. செங்குட்டுவன், ஜெயங்கொண்டம் ஆசிரியர் திரு. ராஜா, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைகதிரவன், ஆகியோர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்டத்தில் போதை பயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.