தேனி – நவ -17,2021
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று நபர்களை தன் உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவித்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வராக நதி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற மூன்று நபர்கள் ஆற்று வெள்ளத்தில் திடீரென சிக்கிய நிலையில் அவர்களின் குரல் கேட்டு அருகில் இருந்த மேல்மங்கலம் ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சற்றும் தாமதிக்காமல் ஆற்று வெள்ளத்தில் குதித்து தன் உயிரை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களையும் மீட்டார்.
மேலும் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நபர்களின் உயிரை காப்பாற்றிய ரவிக்குமார் அவர்களின் வீர தீர செயலை கெளரவிக்கும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
அதேபோன்று தப்பிச்சென்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை அதிரடியாக சுற்றிவளைத்து மடக்கி பிடித்த சோதனைச் சாவடி பணியில் இருந்த காவலர்களின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரியகுளம் உட்கோட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமக்காபட்டி சோதனைச்சாவடியில் சரவணன் தேவதானப்பட்டி காவல் நிலையம், தேனி மாவட்டம்
பாலசுப்பிரமணியம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையம்,திண்டுக்கல் மாவட்டம்மேகநாதன் விருவீடுதிண்டுக்கல் மாவட்டம் ஆகியோர் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கொடைக்கானல் காவல் நிலைய கொலைமுயற்சி, குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தப்பி வருவதாக தகவல் கிடைத்தவுடன் சோதனைச் சாவடி பணியில் இருந்த காவலர்கள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்ட நிலையில் குற்றவாளி தப்பி செல்ல முயன்ற போது அதிரடியாக சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை அதிரடியாக சுற்றி வளைத்து மடக்கி பிடித்த சோதனைச்சாவடி பணியில் இருந்த மூன்று காவலர்களின் பணி சிறக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.