திண்டுக்கல் – நவ-04,2021
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் முருகன், நக்சலைட் தடுப்பு பிரிவினர் மற்றும் எண்ணங்களின் சங்கமம் தன்னார்வலர் விஜய் ஆகியோருடன் இணைந்து திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், பழனி தாலுகா காவல் நிலைய சரகம், காவாலப்பட்டி பஞ்சாயத்து, சண்முகம் பாறை (கணவாய் மேடு) ஆதிவாசிகள் கிராமத்தில் தீபாவளி கொண்டாடினார். அப்போது மின்சார வசதி இல்லாமல் இருந்த கிராமத்திற்கு சூரிய ஒளியில் இயங்கும் நான்கு தெரு விளக்குகள், சிறுவர் | சிறுமியர்களுக்கு புத்தாடைகள், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் பட்டாசுகளும், மேலும் அங்கு வசித்துவரும் 16 குடும்பங்களுக்கு கம்பளி, போர்வைகள் மற்றும் இனிப்புகளும் வழங்கினார். மேலும் பழனி நெய்க்காரபட்டி ரேணுகா தேவி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாபு ஆதிவாசி கிராம மக்களுக்கு பண உதவிகளும் வழங்கினார்.