திருநெல்வேலி – நவ -11,2021
தனியார் பேருந்து நடத்துனரை அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தெற்கு இடைகால் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி(30) என்பவர் திருநெல்வேலியிலிருந்து களக்காடு செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். 10.11.2021 அன்று திருநெல்வேலி, புதிய பேருந்திலிருந்து களக்காடு செல்லும்போது, சின்னசாமி வேலை செய்யும் தனியார் பேருந்தில் சிங்கிகுளம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி (26) என்பவர் முன்பக்க படியில் தொங்கிக்கொண்டு வந்ததை சின்னசாமி சத்தம்போட்டு பின்புறம் ஏற சொல்லியுள்ளார். பின் மீண்டும் முன்பக்க படியில் தொங்கிக் கொண்டு வந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி சிங்கிகுளம், இசக்கி அம்மன் கோவில் அருகே பேருந்து வந்த போது, சின்னசாமியை அவதூறாக பேசி அரிவாள்மனையால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தவே பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போடவும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். பின் சின்னசாமியை சிங்கிகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சின்னசாமி களக்காடு காவல் நிலைத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் களக்காடு காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் விசாரணை மேற்கொண்டு சின்னசாமியை அவதூறாக பேசி, கொலை முயற்சியில் ஈடுபட்ட துரைப்பாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.