சேலம் – நவ -30,2021
சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில் மாடாசாமி துணை ஆணையாளர் வடக்கு மேற்பார்வையில் சூரமங்கலம் சரகம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் தலைமையில் 28.11.2021 ந் தேதி இரவு 01.10 மணி சுமாருக்கு சேலம் மாநகரம் கருப்பூர் டோல் கேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா, சிறப்பு காவல் உதவிஆய்வாளர்கள் பூபதி, முதல்நிலைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் உதவிஆய்வாளர்கள் அர்த்தனாரி, அசோகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த KA02 MA 940 என்ற பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறத்தி சோதனை செய்ய அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2,32,650/- மதிப்புள்ள குட்கா பொருட்கள் 25 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தி வந்த கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(27) மற்றும் அருண் (26) ஆகியோரை கைது செய்து குட்கா பொருட்களை கைப்பற்றி கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் சான்றிதழ் வழங்கி பாரட்டினார்