தென்காசி – நவ -27,2021
போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (13/08/2021) அன்று நயினாரகரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் இசக்கி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தை தங்களது சித்தப்பா மகன் அனந்தகுரு என்பவர் போலி ஆவணங்கள் கொண்டு அவருடையது என உரிமை கொண்டாடுவதாகவும் தங்களது இடத்தை மீட்டு கொடுக்குமாறும் கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) சந்தி செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உதயகுமார் மற்றும் இசக்கி என்பவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.