அரியலூர் – நவ – 14,2021
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் ரூபாய் 13,77,146 மதிப்புள்ள 100 கைபேசிகள் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் மீட்டு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் உரிய நபர்களிடம் வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் 29.04.2021 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் , காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவனேசன் (தொழில்நுட்பம்) மற்றும் காவலர்கள் சுரேஷ் பாபு , சத்யராஜ், தினேஷ்குமார் ,
ரஞ்சித்குமார், அரவிந்த்சாமி, பிரபாகரன் மற்றும் திருமுருகன் ஆகிய பத்து நபர்கள் கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் 100 கைபேசிகளை மீட்கப்பட்டது.
மேலும் சைபர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 12,91,293 பணம் முடக்கப்பட்டு உரியவர்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், ரகசிய எண் ,வங்கி கணக்கு எண் ,OTP போன்ற விவரங்களை முன்பின் தெரியாத இடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் யாரேனும் ஏமாற நேர்ந்தால் 155260 என்ற இலவச அழைப்புஎண்ணிற்கும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்