சென்னை – நவ -11,2021
சென்னையில் தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்து வருகிறது. காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு தேவையான உதவிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை, காவல் துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
.இந்நிலையில் தான் கடந்த மூன்று நாட்களாக டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த பகுதி பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார் இன்று காலை சாலையாரம் கீழ விழுந்து பரிதாபமாக கிடந்த ஒருவரை தன்னுடைய தோல் மீ்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவரது செயல் தமிழக காவல்துறைக்கு ஓரு எடுத்துக்காட்டாக உள்ளது
இவரை போன்ற தன்னலம் கருதாமல் பணியாற்றும் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்