சென்னை – நவ-06,2021
இரண்டாம்நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் ஐந்துநாள் பணி¸ ஒருநாள் கூடுதல் ஊதியத்துடன் பணி¸ ஒரு நாள் ஓய்வு என PSO திருத்தம் செய்து ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பாக நன்றி.தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் காவலர்கள் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்தனர். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் சைலேந்திர பாபு. இ.கா.ப.¸ மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.