திருநெல்வேலி – நவ -28,2021
செய்தியாளர் – இம்ரான்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாகவும் அடிக்கடி விபத்து் ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் பலமுறை புகார்கள் தெரிவித்து வந்தனர் மேலும் மேலப்பாளையத்தில் மாடுகளால் இந்த ஆண்டு முதல் தற்போது வரை 23 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர் இந்நிலையில் மேலப்பாளையத்தை சார்ந்த பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள்
மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனரிடமும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்திருந்தனர்
இந்நிலையில் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி மேலப்பாளையம்
காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் தலைமையில் மேலப்பாளையம் சமூக ஆர்வலர்களோடு இணைந்து் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது இதைத்தொடர்ந்து அதிக விபத்துகளை ஏற்படுத்தும் இடங்களான மேலப்பாளையம்
சந்தை ரவுண்டானா, கருங்குளம், பஜார் குறிச்சி, நத்தம், ஆகிய முக்கிய இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர் காவல்துறையினரே சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடிப்பதை கண்ட பொதுமக்கள் மேலப்பாளையம் காவல்துறையினரின் இந்த செயலை வெகுவாக பாராட்டினர்.