80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி முன் விரோதம் காரனமாக ஒருவர் கொலை 2,பேர் கைது தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

முன் விரோதம் காரனமாக ஒருவர் கொலை 2,பேர் கைது தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி – நவ -24,2021

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை – எதிரிகள் 2 பேர் கைது. உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சினி காலனியை சேர்ந்த கண்ணன் மகன் சாரதி (எ) பார்த்தசாரதி (35) என்பவரை அவரது வீட்டின் அருகில் நேற்று (23.11.2021) மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதி (எ) பார்த்தசாரதி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார்,முத்துகணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்த சாரதி (எ) பார்த்த சாரதி என்பவருக்கும் செல்சினி காலனியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் மாரிமுத்து (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாரிமுத்து மற்றும் மாரிமுத்துவின் உறவினரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (20) ஆகிய இருவரும் சேர்ந்து சாரதி (எ) பார்த்த சாரதியை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து எதிரிகள் மாரிமுத்து (26) மற்றும் கார்த்திக் (20) ஆகிய இருவரையும் மேற்படி தனிப்படையினர் இன்று கைது செய்தனர். மேலும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்