93.1 F
Tirunelveli
Friday, July 1, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 1,கோடி மதிப்புள்ள முந்திரி பருப்பு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கடத்தல் 7,பேர்‌‌‌ கைவரிசை ஏஎஸ்பி...

1,கோடி மதிப்புள்ள முந்திரி பருப்பு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கடத்தல் 7,பேர்‌‌‌ கைவரிசை ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை சுற்றிவளைத்தது

தூத்துக்குடி – நவ -27,2021

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 7 எதிரிகள் கைது – கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் – கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளை விரைந்து கைது செய்த தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி பிச்சையா லாரி புக்கிங் அலுவலகம் மூலமாக Tata Benz Lorry TN 04 AK 4710 என்ற கண்டெய்னர் லாரி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து நேற்று (26.11.2021) ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு வரும்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலூரணி விலக்கு பகுதியில் வைத்து மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555 என்ற காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து மேற்படி லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துகுமார் (43) த/பெ. சுப்பிரமணியன், ராஜீவ்நகர், தூத்துக்குடி என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப லாரியை கடத்தி சென்ற மர்மநபர்களை கைது செய்து லாரியை மீட்க உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், புதுக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர்கள் சக்திவேல், லெட்சுமணன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலைய கார்த்திகேயன், காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் லாரி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்களை கொண்டு அங்காங்கே உள்ளே சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாகனங்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, காக்கநேரி என்ற இடத்தில் வைத்து கடத்தி சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட காரையும் கைப்பற்றி, காரில் வந்தவர்களை விசாரணை செய்ததில், அவர்கள் 1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி, 2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி, 3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி ஆகிய 7 பேர் என்பதும், இவர்கள் மேற்படி சம்பவ இடத்தில் லாரி ஓட்டுநரை தாக்கி அவரை காரில் ஏற்றியும், எதிரிகளில் விஷ்ணுபெருமாள் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் லாரியை ஒட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் உடனடியாக எதிரிகளை கைது செய்து, ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கடத்தப்பட்ட லாரியை துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்று கைப்பற்றி எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்