93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி "ஆன்லைன் மோசடி கமிஷனர்‌‌‌ அதிரடி உத்‌‌‌தரவால்‌‌‌ உடனடியாக மீட்‌‌‌க்கபட்ட பணம்...

“ஆன்லைன் மோசடி கமிஷனர்‌‌‌ அதிரடி உத்‌‌‌தரவால்‌‌‌ உடனடியாக மீட்‌‌‌க்கபட்ட பணம்…

திருச்சி – நவ -17,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் மோசடி நடைபெறவதை தடுக்கும்வண்ணம் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதிகாரிகள் மற்றும் அதன்படி தமிழ்மணி, 130-A வாசன் வேலி, 15வது குறுக்குத்தெரு, வயலூர் ரோடு, திருச்சி என்பவர் தனது செல்‌‌‌போனில்‌‌‌ பேசிய நபர் எல்‌‌‌ஐசி பணம்‌‌‌ வந்திருப்பதாகவும், அதனை பெற்றுதருவதற்கு மனுதாரரின் வங்கி கணக்கு விபரங்களை கேட்டதாகவும், இதனை உண்மையென நம்பி தனது வங்கி விபரங்களை கூறிவிட்டதாகவும், உடனே தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.46,999/ எடுத்துவிட்டதாகவும் நடவடிக்கை கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுத்த புகாரின்பேரில் மேல்விசாரணைக்காக சைபர் கிரைம் காவல்நிலையத்தில் விசாரணை செய்தும், மாநகர காவல் ஆணையரின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும் மனுதாரரின் இழப்பு தொகையான ரூ.46,999/-மனுதாரருக்கு மீட்டுதரப்பட்டது.

மேலும் கோமதி, க.பெ.சித்தீஸ்வரன், 616001.23/F7 சஞ்சய் ஹைவே அபார்ட்மெண்ட், இக்பால் காலனி, டிவிஎஸ் டோல்கேட், திருச்சி என்பவர் தான் Flipkart-ல் தொலைகாட்சி ஆர்டர் செய்ததாகவும், அந்த order failed என வந்ததாகவும், Flipkart Customer Care எண்ணை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசியவர் Any Desk app-l Install செய்ய சொன்னதாகவும், இதனை உண்மையென நம்பி தான் மேற்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்ததாகவும், உடனே தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.1,00,465/- எடுத்து விட்டதாகவும், எனவே தான் இழந்த பணத்தை மீட்டுதரக்கோரி Online மூலம் NCRP-ல் கொடுத்த புகார் மனு மேல்வரைவு செய்யப்பட்டு பெறப்பட்டும் விசாரணைக்காக சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பெறப்படும் விசாரணை செய்தும், மனுதாரரின் இழப்பு தொகையான ரூ.1,00,465/- மனுதாரருக்கு மீட்டுதரப்பட்டது.

மேற்படி ஆன்லைன் மூலம் மொத்தம் ரூ.1,47,464/- பணத்தை இழந்த தமிழ்மணி மற்றும் கோமதி ஆகியோர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து தாங்கள் இழந்த பணத்தை பெற்று தந்தமைக்கு மனதார நன்றி தெரிவித்தனர்‌‌‌
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆன்லைன் மூலம் பணமோசடி ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால்‌‌‌ தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்