விருதுநகர் – நவ -24,2021
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் சாமி தரிசனம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் நவம்பர்25, தமிழகத்தின் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்றதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்திற்கு இணையான புராதான சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
அந்த வகையில் மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனைவியுடன் நேற்று( 24 .11 .2021) கார் மூலம் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு கோவில் ஆடிப்பூர கொட்டகையில் வைத்து தக்கார் ரவிச்சந்திரன், விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், செயல் அலுவலர் இளங்கோவன், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர்
தொடர்ந்து முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் மேளதாளம் முழங்க ஆண்டாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆண்டாள் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்வரின் பெயர் ஜென்ம நட்சத்திரத்திற்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது பூஜைகளை அர்ச்சகர் ரகுராம பட்டர்செய்து வைத்தார் .உடன் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கிட்சப்பன் வேத பிரான் சுதர்சன் கோவில் மணியம் கோபி ஆகியோர் உடனிருந்தனர் தொடர்ந்து முதல்வர் கோவிலை விட்டு வரும் பொழுது கோவில் யானை ஜெயமால்யதா விற்கு கேரட் ,பீட்ரூட் ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து அவர் ஆண்டாள் பிறந்த நந்தவனம் வடபத்ரசாயி பெருமாள் திருக்கோவில் ஆகியவற்றிற்கு சென்று விட்டு வெளியே வரும் போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் உலக நன்மைக்காகவும், கோரானா தாக்கம் குறைய வேண்டியும் பூமி பிராட்டி யான ஆண்டாளை வழிபட்டேன் எனக்கு இது மனநிறைவு தந்தது என்று கூறினார்.
பின்னர் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் துரை என்ற ராஜா துறவிகள் பேரவை சார்பாக சரவண கார்த்திக், நகர செயலாளர், இளங்கோவன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பொறியாளர் முருகன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் நகர பொருளாளர் சுந்தரமூர்த்தி நகர செயலாளர் ஆனந்த ராகவேந்திரா இயற்கை ஆர்வலர் அரையர் வடபத்ரசாயி சுவாமிகள் , வழக்கறிஞர் வைதேகி ஆகியோர் திரண்டு இருந்து உற்சாக வரவேற்பு வழங்கினர் அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் கார் மூலம் மதுரைக்கு சென்றார்
மத்தியபிரதேச முதலமைச்சர் ஸ்ரீவி ஆண்டாள் கோவிலுக்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட எஸ்பி மனோகரன் மத்தியபிரதேச பாதுகாப்பு அதிகாரிகள் ஏடிஎஸ்பி மணிவண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன்,இராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், உட்பட 3 டி எஸ் பி கள் 6 இன்ஸ்பெக்டர்கள், 39 சப்-இன்ஸ்பெக்டர்கள் 235 போலீசார் உட்பட 348 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் காலை 10 . 25 மணிக்குகோவிலுக்குள் சென்ற முதல்வர் 11. 2 5வரை கோவிலுக்குள் இருந்த சமயம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் மத்திய பிரதேச முதல்வர் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் வரை சாலைகளில் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்