திருநெல்வேலி – நவ-03,2021
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, மக்தூம் மகன் அப்துல் காதர் என்பவரை ஜான்ஸ் கல்லூரி எதிரே உள்ள இங்கிலீஷ் சர்ச் தென்புறத்தில், 15-09-2021 ம் தேதியன்று இரவு நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் மேலசண்முகபுரத்தை சேர்ந்த, சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பாப்புலிங்கம் மகன் வாத்து இசக்கி முத்து, திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாயக்கண்ணன் என்ற ஐயப்பன் மற்றும் தூத்துக்குடி ராஜீவ் நகர், 2 வது தெருவை சேர்ந்த துரை மகன் சரவணன், மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன் குமார் என்ற சூர்யா ஆகிய ஐந்து நபர்கள் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார், பாளை உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் பாலச்சந்திரன், மற்றும் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் படி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி மேற்படி எதிரிகளான ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்