80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர் இன்ஸ்பெக்டர் சாம்சன்

மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர் இன்ஸ்பெக்டர் சாம்சன்

திருநெல்வேலி – நவ -26,2021

தற்போது பாளையங்‌‌‌கோட்‌‌‌டை இன்ஸ்பெக்டராக உள்ள சாம்சன் இப்பகுதியிலுள்ள பொதுமக்‌‌‌களிடத்‌‌‌தில்‌‌‌ நல்‌‌‌ல நண்‌‌‌பராக பழககூடியவர்‌‌‌
அது மட்டுமல்லாது சிறந்த சமூக சேவகராகவும் உள்ளார் .
குழந்தைகள் நிகழ்ச்சி என்றால் உற்சாகமாக கிளம்பி விடுகிறார் . அவர்களுடன் சேர்ந்து குழந்தைகள் போல விளையாடவும் செய்கிறார் . விழாக்களில் பொன்னாடை போர்த்துவது, புகழ்வது இவருக்கு பிடிக்காது. தான் இருக்கும் இடங்களில் பயனுள்ள செயல்கள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.முக்கியமாக விலங்குகள் மீது அதீத பாசம் உள்ளவர் . ரோட்டில் துன்பப் டும் விலங்குகள் இவர் கண்ணில் பட்டால் அதற்கு விமோசனம் தான்.
எப்பேர்பட்ட பாம்புகளும் இவர் கைபட்டால் சாந்தமாகிவிடுகிறது. லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து விடுகிறார் .
மனிதர் ரெம்ப நல்லவரோ என நினைத்து
வாலாட்ட நினைக்கும் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் உள்ளார். மக்கள் தன்னை பார்த்து பயப்பட க் கூடாது என்பதற்காக ஜீப்பில் செல்லாமல் பெரும்பாலான நேரங்களில் பைக்கில் மட்டுமே ரோந்து செல்கிறார்.எளிதில் இவரை சந்திக்கலாம். நேர்மையான அதிகாரிகள் கிடைப்பது மிக அரிது. நமக்கு கிடைத்த இந்த நல்ல அதிகாரியை பொதுமக்‌‌‌கள்‌‌‌ பலரும்்‌‌‌ பாராட்‌‌‌டி வருகின்‌‌‌றனர்‌‌‌

இவர் எந்த ஸ்டேஷனில் வேலை செய்தாலும் அப்பகுதி நபர்களின் பாராட்டிற்கு உள்ளாகிவிடுகிறார் . நமது கண்கள் கண்ட அதே காட்சியை முன்பு இவர் வேலை பார்த்த ஸ்டேஷனில் கண்ட ஒருநபர் தனது முக நூலில் பதித்த பகுதிகள் தான் கீழே தரப் பட்டுள்ளது.

கண்டிப்பாக படியுங்கள்..இவர் யாரென்று தெரியாது,,ஆனால் இவரது சேவைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது ,,

மாற்றம் தேடி….
இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்….

கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்த மனிதரை சந்திக்க நேர்ந்தது அங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் சாம்சன் ..
என்ன செய்தார் இவர்

 • காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்
  *பல இடங்களில் புதிதாக மரங்கள் பல் நட்டுள்ளார்.
  *காவல் நிலையத்தில் பல் மாற்றங்களை செய்துள்ளார் .
 • இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியதோடு விளம்பரம் செய்ய வேண்டுமா அதற்கும் வழி தருகிறேன் என சிட்டுக்குருவிக்கு கூடுகள் செய்து அந்த கூட்டில் விளம்பரம் செய்து மாட்டுங்கள் அதனால் சிட்டுக்குருவிகள் பெருகும் என அறிவுறுத்துகிறார்…
  *சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்
  *கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்க இவரே சுவரொட்டி ஒட்ட போர்டுகள் பொருத்தி வருகிறார்.
 • அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை பாலிதீன் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்
 • சென்று கொண்டிருக்கும் போதே வெற்றிடமிருந்தால் அங்கு மரக்கன்றுகள் வாகனத்தை நிறுத்தி. நட்டு செல்கிறார்…
  *கழிவு சாக்க்குகள் கழிவு கேஸ் டியூப்கள் போன்ற பொருட்களை கொண்டே குப்பை சேகரிக்க பைகள் செய்ய கற்றுத்தருகிறார்
  இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாலிதீன் பைகள் ஒலிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் தானே டிசைன் செய்து ஒரு பையை வடிவமைத்து அதனை அதிகமாக தயாரிக்க செய்து விற்பனையும் செய்கிறார் மிகவும் மலிவான விலையில் ஒரு மணி பர்சை போன்ற இந்த பை தேவைக்கு ஒரு பிக்சாப்பர் பையாக மாறுகிறது இந்த பையாக இருந்தால் கண்டிப்பாக கடைக்கு செல்லும் போது பாலிதீன் பையாக தேவைப்படாது அதைப்பார்த்தவுடன் 100 ரூபாய்க்கு ஒரு பை வாங்கினேன் இனி வாழ்வில் எங்கும் எந்த இடத்திலும் பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுக்க வைத்தது அந்த பை..

ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழ்ங்கவும் அறிவுறுத்துகிறார் கனிவாக…

காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் அதிகம் குப்பைத்தொட்டி என வைத்துள்ளார்

ஒரு அட்டைப்பெட்டியும் இருந்தது அதில் மாணவர்களுக்கான சீருடையும் இருந்தது எதற்கு என விசாரித்த போது தான் தெரிந்தது அது வறுமையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழ்ங்கிட அவரது சொந்த முயற்சியில் வரவழைத்து. என தெரிந்தது

மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்

இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல்
நம்ம போட்டோ எடுத்ததையே அனுமதிக்கல இவரு அப்புறம் காலர் பிக்சருக்குன்னு சொல்லிதான் படமெடுக்க முடிந்தது இவரை

உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இயற்கை அன்னை வாழ்கிறாள்…

இயற்கை அன்னையின் வளம் காக்க இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே இன்னும் பதிவிட முடியாமல்…..

வெளியே தெரியாமல் செய்வது இவர் நோக்கம் என்றாலும் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளிப்படுத்துவது,,,இவர்கள் போன்று அனைத்து அரசு ஊழியர்களும் தன் கடமையோடுசேர்த்து சமூகசிந்தனையோடு வாழ்ந்தால் விரைவில் உருவாகும் .வருமை இல்லாத தமிழகம்.கல்லாதவர் இல்லாத தமிழகம். சுகாதாரமான வளமான தமிழகம் வெகுதூரமில்லை….

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்