76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் சென்னை "சென்னையில் மெடிக்கல் ஷாப்பில் போதை மருந்து விற்‌‌‌பனை ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் "

“சென்னையில் மெடிக்கல் ஷாப்பில் போதை மருந்து விற்‌‌‌பனை ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் “

சென்னை – நவ – 23,2021

சென்னையில் இளைஞர்களுக்கு போதை தரும் மருந்துகள் விற்பனை செய்வதை தவிர்க்க மருந்துக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறை கவனத்திற்கு தெரியவந்தது. எனவே போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் இன்று மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) செந்தில்குமார், இ.கா.ப, காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப ஆகியோர் தலைமையில், மருந்துக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இணை ஆணையாளர்கள் துரைக்குமார், இ.கா.ப, (வடக்கு மண்டலம்) ராஜேஸ்வரி, இ.கா.ப (மேற்கு மண்டலம்), பிரபாகரன், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வது குறித்து பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது.

போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளின் பெயர்களை எழுதி, அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் விற்பனை செய்ய இயலாது என்பதை அனைத்து மருந்து கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியிருக்க வேண்டும்.

மருந்துகள் விற்பனை செய்யும் விபரங்களை முறையான பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும்.

அனைத்து மருந்து கடைகளிலும், சாலைகளை நோக்கியும், மருந்து கடைகளுக்குள்ளும் CCTV கேமராக்களை கண்டிப்பாக பொருத்தவேண்டும்.

மருந்து சீட்டுகளில் மருந்து வாங்கிய பின்பு Delivered என்ற சீல் அச்சிடவேண்டும்.

இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை வழங்குவதை அறவே தவிர்க்க வேண்டும்,

தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மருந்துகளை மருத்துவர் தரும் ஆலோசனை கடிதம் மற்றவர்களுக்கானதாக இருந்தாலும் சிறுவர்களிடம் நேரடியாக வழங்கக் கூடாது.
இளைஞர்கள், சிறுவர்கள் போதை மருந்துகள் வாங்குவது பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக, மருந்துக்கடையின் வெளிப்புறத்தில், அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களை பொதுமக்கள் பார்வைக்கு படும்படி எழுதி ஒட்டியிருக்கு வேண்டும்.

சிறுவர்களுக்கு போதை தரும் மருந்துகளை விற்கும் மருந்து கடையின் விபரங்களை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவிக்கும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும்.

போதை தரும் மருந்து மாத்திரைகளை யாருக்கும் மொத்தமாக வழங்கக்கூடாது.

போதை தரும் மருந்து மற்றும் மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்து மிரட்டும் நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைக்கு பயன்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்படி அறிவுரைகள் வழங்கி மருந்துக்கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒத்துழைக்கும்படியும், சமுதாயத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்துதற்கு உதவும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து மருந்து கடை உரிமையாளர்களும் போலீசாரின் அறிவுறுத்தல் படி நடந்து கொள்வதாகவும், இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்