தென்காசி – நவ -22,2021
சாலையில் தவற விட்ட ரூபாய் 20 ஆயிரம் பணத்தை காவல்துறையின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்த நபருக்கு பாராட்டுக்களை தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யானை பாலம் அருகே வசித்து வருபவர் மதன்குமார் இவர் அவரது தங்கை திருமண செலவிற்காக மணிபர்சில் வைத்திருந்த பணம் காசி விஸ்வநாதர் கோவிலின் வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தவற விட்டுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த தவளபுரம் 2-வது தெருவை சேர்ந்த மீரா கனி என்பவரின் மகன் முத்து அலி என்பவர் சாலையோரம் கிடந்த மணி பர்சை எடுத்து பார்த்தபோது அதில் டிரைவிங் லைசென்ஸ், ATM கார்டு மற்றும் ரூபாய் 20000 பணம் இருந்துள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ பணம் மட்டும் தேவை இல்லை மனமும் தேவைதான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கீழே கிடந்த மணிபர்சை தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். பின்பு பணத்தை தவறவிட்ட நபர் குறித்து விசாரணை செய்து மதன்குமாரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து தகுந்த ஆலோசனைகள் வழங்கி பின்னர் முத்து அலியின் மனிதாபிமானமிக்க இச்செயலை பாராட்டும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பண வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.