86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில்‌‌‌ வெள்ள மீட்பு பணிகளை மாவட்ட எஸ்பி நேரில் சென்று ஆய்‌‌‌வு செய்‌‌‌தார்‌‌‌‌

தூத்துக்குடியில்‌‌‌ வெள்ள மீட்பு பணிகளை மாவட்ட எஸ்பி நேரில் சென்று ஆய்‌‌‌வு செய்‌‌‌தார்‌‌‌‌

தூத்துக்குடி – நவ -25,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு – மீட்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக சென்று கண்காணிப்பு.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, வெள்ளத்தில் சிக்கியிருந்த 25 பேரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன் தலைமையிலன போலீசார் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம், குருவிநத்தம் ஆகிய பகுதிகள் உட்பட மாவட்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக சென்று கண்காணித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

வெள்ளத்தில் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்ட ஓட்டப்பிடாரம் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார். இதுபோன்று தொடர்ந்து இந்த பேரிடர் கால மீட்பு பணியை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களுக்கு உதவுமாறும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் தரைப்பாலங்களை கடந்து செல்வதையும், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் நீர் நிலைகளை கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தூத்துக்குடி மாவட்;ட காவல்துறையில் மாநில பேரிடர் கால மீட்பு படையினர் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது காவல்துறையினர் ஆங்காங்கே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற அலை பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்