82.3 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "மெச்சதகுந்த பணிக்காக 14,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு....

“மெச்சதகுந்த பணிக்காக 14,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

தூத்துக்குடி – நவ -22,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 14 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் 5 ஐந்து எதிரிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டும், 2 எதிரிகள் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்த வழக்கின் முக்கிய எதிரியை கடந்த 19.11.2021 அன்று கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், முதல் நிலை காவலர்கள் செல்லையா பாண்டியன் மற்றும் கதிரவன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு திருட்டு வழக்கில் காணாமல் போன 14 ஆடுகளையும், எதிரிகள் இருவரை கைது செய்தும், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 3 கார்களையும் பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல் நிலைக் காவலர் மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே 24 கிலோ 100 கஞ்சா வைத்திருந்த எதிரியை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜா, மகாலிங்கம் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சாமுவேல் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

மணப்பாட்டில் இருந்து ஒரு பெண்ணை காரில் கடத்தி செல்வதாக வான் செய்தி மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் வாகன சோதனை செய்து காரை மடக்கி பிடித்த புதியம்புத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காந்தி செல்வம் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் காணாமல் போன லாரி மற்றும் 2 எதிரிகளையும் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்து வழக்கிற்கு உறுதுணையாக இருந்த முத்தையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைக்கப்பெற்ற வான் செய்தி தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காரில் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் எதிரியை இருசக்கர வாகன ரோந்து பணியில் இருந்து துரத்தி சென்று மடக்கி பிடித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

காவல் ஆய்வாளர் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்