தூத்துக்குடி – நவ -28,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத் தேவைகளுக்கு அங்கிருந்து வெளியே சென்று வருவதற்கு படகு மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்வதற்காக அப்பகுதிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் சுமார் 1500 வீடுகள் உள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் காய்கறிகள் வாங்க, மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாதபடி உள்ளனர்.
மேற்படி ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ( நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து வெளியே செல்ல தண்ணீர் குறைவாக இருக்கும் வரை படகும், அங்கிருந்து மெயின் ரோட்டிற்கு செல்வதற்கு வாகன வசதியும் செய்வதற்காக அப்பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் நம்பிராஜன், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் கலைவாணர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.